Saturday, March 9, 2013

தமிழர் உறவின் முறை எதற்காக?

வணக்கம்

சாதி இன்றும் பல வகையில் நம்மை பிரித்து வைக்கின்றது. அதில் இருந்து விடுபட்டு நாம் சாதியற்றவர்களாய் மாற வேண்டும். மாறுவதற்கு எது தடையாக இருக்கின்றதோ அதையெல்லாம் நாம் அழித்தொழிக்க வேண்டும். அப்படி ஒழித்தால்தான் நம் சமூதாயம் முன்னேற்றம் காணும்.

சாதியை பயன்படுத்துவதில் ஒரு நிலை சாதிய வழி திருமணங்கள். இதை தவிர்த்து சாதி மறுப்புத்திருமணம் செய்யும் பலரைப்பார்த்து சாதிய உறவுகள் சொல்வது "சாதியைவிட்டு தள்ளி வைப்போம்" என்று. சாதியை விட்டு தள்ளியதால் கிராமச் சூழ்நிலையில் பெரும்பாலும் நடப்பதென்பது கிட்டத்தட்ட பொருளாதார தடை தான். ஒருவருக்கொருவர் பேசுவதோ கொடுக்கல் வாங்கலோ கூடாதென்பது தான்.

சாதியை மீறி காதலிப்பவர்கள் இந்த கட்டை உடைத்து தான் வெளியில் செல்ல வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். இதில் வெளியூர் சென்று பலர் வெற்றி கண்டிருந்தாலும் சிலர் ஊருக்குள்ளேயே இருந்து சிரமப்படுவதை சுட்டிக்காட்டி மற்றவர்களுக்கு அந்த எண்ணம் வராமல் பார்த்துக்கொண்டது இந்த சமூக அமைப்பு.

இன்று பொதுவாய் கிராமங்களும் நகரைப்போன்று ஆன பிறகு இதன் பாதிப்பு அனேகருக்கு தெரியாமல் இருக்கலாம். இருந்தாலும் பல இடங்களில் இதன்பாதிப்பு இருந்து வருவதென்பது உண்மையே.

சாதிய உறவால் பெரும்பாலோர் எதையெல்லாம் இன்று பெற்று அனுபவிக்கின்றார்கள் என்பதை விடுத்து நாம் சாதியற்றவர்களாய், தமிழர்களாய், உறவினர்களாய் இணைந்து "தமிழர் உறவின் முறை"யாய் ஒருங்கிணைந்து நாம் ஒரு பெரிய சமூக அமைப்பாக மாறி நமக்கான வளர்ச்சியை நாம் அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இந்த நிலையை கட்டியமைக்க சாதியற்றவர்கள் அனைவரும் முன்வாருங்கள்.

No comments:

Post a Comment